முகநூலில் இருந்த விளம்பர பதிவால் பொதுமக்கள் அதிர்ச்சி! போலீசார் வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் முகநூலில் மகள் விற்பனைக்கு என பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வருகிறது.

கேரளா, தொடுபுழா பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதல் மனைவியை பிரிந்து மற்றொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார். 

இவர் முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது மதிப்பு தக்க மகளை விற்பனை செய்வதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் பார்த்து பெற்ற மகளை விற்பனை செய்வதா என அதிர்ச்சி அடைந்தனர். 

அவர்களின் சிலர் இது தொடர்பாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த பதிவு முகநூல் பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது. 

முதல் மனைவியுடன் இருந்த பிரச்சனை காரணமாக மகள் விற்பனைக்கு என விளம்பரம் செய்திருக்கலாம் என கருத்து நிலவியது. 

போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சைபர் கிரைம் போலீசாரின் விசாரணை அறிக்கை வந்தவுடன் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Facebook post daughter sale Police investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->