எரிவாயு குழாயில் தீ விபத்து - கர்நாடகாவில் பரபரப்பு.!
fire accident in gas tube in karnataga
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குழாயில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதாவது, இந்த பகுதியில் சிலிண்டர்களுக்கு பதிலாக குழாய்கள் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படும் திட்டமானது பல ஆண்டுகளாக உள்ளது .
இந்த நிலையில் இந்த குழாயின் இரண்டு இடத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையிலும் கசிவு மீண்டும் ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த எரிவாயு கசிவு எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
fire accident in gas tube in karnataga