முதல் முறையாக விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் இறங்கிய போர் விமானம்.!!
first time war flight landing in INS vikrant navy at night
முதல் முறையாக விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் இறங்கிய போர் விமானம்.!!
இந்தியாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானந்தாங்கி கப்பல் தயாரிக்கப்பட்டது. இந்தக் கப்பலில், மிக்-29கே என்ற போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது. இது ஒரு வரலாற்று சாதனை என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சோதனை நேற்று இரவு அரபிக்கடலில் விமானம் தாங்கி கப்பல் சென்றுகொண்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்குவது என்பது ஒரு சவாலான விஷயம்.
இந்த சோதனை மிகவும் வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மன உறுதி மற்றும் திறமையை நிரூபித்திருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் தெரிவித்ததாவது, "ஐஎன்எஸ் விக்ராந்த் விமான தாங்கி கப்பலில் மிக்-29கே ரக விமானத்தை முதல்முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இது தன்னம்பிக்கையை நோக்கிய கடற்படையின் உத்வேகத்தை குறிக்கிறது" என்றுத் தெரிவித்தார்.
இரவு நேரத்தில் லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். இதற்கிடையே இந்தியக் கடற்படையினர் விக்ராந்த் கப்பலில் போர் விமானம் தரையிறங்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.
English Summary
first time war flight landing in INS vikrant navy at night