ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி - கேரளாவில் சோகம்.!
five peoples died for drowned river in kerala
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள குண்டூச்சி எரிஞ்சிபுழா பகுதியை சேர்ந்த அஷ்ரப்-ஷபானா என்ற தம்பதியினரின் வீட்டுக்கு அவர்களது உறவினர்களான மஜீத்-சபீனா தம்பதி மற்றும் மஞ்சேஸ் வரத்தை சேர்ந்த சித்திக்-ரம்லா தம்பதி தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் அனைவரும் அங்குள்ள எரிஞ்சிபுழா ஆற்றிற்கு நேற்று குளிக்க சென்றனர். அப்போது அஷ்ரப்பின் மகன் யாசின், அவர்களது வீட்டுக்கு வந்திருந்த மஜீத்தின் மகன் சமத், சித்திக்கின் மகன் ரியாஸ் உள்ளிட்ட மூன்று பேரும் ஆற்று சுழலில் சிக்கி மூழ்கினர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர் சிறுவர்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறுவர்கள் மூன்று பேரும் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று கண்ணூரில் கோட்டாலி பகுதியை சேர்ந்த வின்சென்ட் மற்றும் அவரது பக்கத்து வீட்டு சிறுவனரான அல்பின் ஆகிய இருவரும் சரல்புழா ஆற்றுக்கு சென்றனர். அப்போது சிறுவன் அல்பின் ஆற்றுக்குள் தவறி விழுந்ததையடுத்து அவனை காப்பாற்ற வின்சென்ட் ஆற்றுக்குள் குதித்துள்ளார். அப்போது இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். காசர்கோடு மற்றும் கண்ணூரில் ஆற்றில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five peoples died for drowned river in kerala