பரபரப்பு வீடியோ !!! தன் கார் ஓட்டுநரை அவதூறாக பேசி செருப்பால் அடித்த முன்னாள் முதல்வரின் மகள்...! - Seithipunal
Seithipunal


அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவின் மகள் காஷ்யப், தன் வீட்டில் கார் ஓட்டுநரைக் கடுமையாக திட்டி செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ காட்சியைக் கார் ஓட்டுநர் மண்டியிட்டுக் கீழே அமர்ந்துள்ளார். அப்போது அவரை காஷ்யப், கடும் சொற்களைச் சொல்லி அவதூறாகப் பேசி செருப்பால் அடிக்கிறார். மேலும் அதிகப் பாதுகாப்பு நிறைந்த அசாம் மாநில எம்.எல்.ஏ.ஹாஸ்டலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

 

காஷ்யப்:

இதுகுறித்துப் பேசிய முன்னாள் முதல்வரின் மகள் காஷ்யப் கூறியதாவது, " எனது ஓட்டுனர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னைப் பற்றிய தவறாகப் பேசி வந்தான். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. இப்போது குடித்துவிட்டு என் வீட்டுக் கதவைத் தட்டினான் " எனத் தெரிவித்தார். மேலும் பிரபுல்ல குமார் மஹந்தா,இரண்டு முறை அசாம் முதல்வராகப் பதவி வகித்தது அனைவரும் அறிந்தவை.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Chief Ministers daughter hits her car driver shoe after slandering him


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->