நீட் முறைகேடு - நான்கு மருத்துவ மாணவர்கள் கைது.!
four medical students arrest for neet malpractice
நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5-ந்தேதி நீட் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் மாநிலம் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளும் நடைபெற்றது தெரிந்தது.
இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன. அதன்படி நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடைபெறுகிறது.
இதுவரைக்கும் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 4 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.
உடனே மருத்துவ மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் சந்தன் சிங், ராகுல் அனந்த், குமார் ஷனு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் கரண் ஜெயின் உள்ளிட்ட நான்கு மாணவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் அந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சீல்வைத்ததுடன் அவர்களுக்கு சொந்தமான லேப்டாப் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் 4 பேரிடமும் நடத்திய விசாரணையின் முடிவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
English Summary
four medical students arrest for neet malpractice