11 ரூபாய் மந்திரத்தில் கரோனாவை குணப்படுத்தும் சாமி... கரோனா பாபா கம்பி என்னும் சோகம்..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் 287,125 பேரை பாதித்துள்ளது. 11,890 பலியாகியுள்ளனர். மேலும், 93,612 பேர் கரோனாவில் இருந்து மீண்டெழுந்துள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது வெளிப்பட துவங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 5 பேர் பலியாகியுள்ள நிலையில், 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசு எடுத்துள்ளது. 

கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாளை (21/03/2020) ஞாயிற்றுக்கிழமையன்று ஊரடங்கு கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பேருந்துகள், இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் காலை சுமார் 7 மணிமுதல், இரவு 9 மணிவரை வீட்டில் மக்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரோனா வைரஸால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிக்க அரசு தேவையான முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இதனை வியாபாரமாகவும், அலட்சியமாகவும் பார்க்கும் சிலரால் பெரும் சோகம் மற்றும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இதன் ஒருபுறமாக இந்தியாவில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த நிலையில், மந்திரம் கூறி ரூ.11 க்கு கரோனாவை விரட்டுவதாக கூறிய பாபா கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் உள்ள ஜோதிடர் சஞ்சய் திவாரி என்ற நபர், தன்னை தானாகவே "கரோனா பாபா" என்கிற பெயரை வைத்து துண்டு பிரசுரம் மூலமாக அலைபேசி எண்ணுடன் விளம்பரப்படுத்தி வந்துள்ளார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, இதனைக்கண்ட காவல் துறையினர் கரோனா பாபாவை கைது செய்து கம்பி உள்ள சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தவறான தகவலை பரப்பியதாக கூறி வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ரூ.11 க்கு தடுப்பு மருந்து என்ற பெயரில் தண்ணீருடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fraud man arrest when corona virus complete solution of Mandra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->