ஆட்சியமைக்க வருமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. அந்த வகையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில், இன்று தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யான் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தனர். அங்கு ஆளுநர் அப்துல் நசீரிடம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கிய சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து ஆந்திராவில் ஆட்சி அமைக்க வரும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார். அதன் படி சந்திரபாபு நாயுடு நாளை ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor abdul nazir invite chandrababu nayudu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->