நாகர்கோவில் : மதுபோதையில் பேருந்து ஒட்டிய அரசு ஓட்டுநர் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் : மதுபோதையில் பேருந்து ஒட்டிய அரசு ஓட்டுநர் இடைநீக்கம்.!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காட்டுப்புதூர் என்னும் கிராமத்திற்கு நேற்று இரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அது தான் அந்த ஊருக்குச் செல்வதற்கு கடைசி பேருந்து என்பதால் பேருந்தில் அதிகளவு கூட்டம் இருந்தது. இந்தப் பேருந்தை மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பென்னட் என்பவர் ஓட்டினார்.

இதையடுத்து இந்த பேருந்து அசம்புரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை விட்டு தாறுமாறாக ஓடியது. இதனால் அச்சமடைந்த பயணிகள் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தச் சொன்னார்கள்.

அதன் பின்னர் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் தான் ஓட்டுநர் போதையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பயணிகள் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து போலீஸார் சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் பணிமனைக்குத் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர் பென்னட்டை மருத்துவமனைக்கு அழைத்துப்போய் ஆல்கஹால் சோதனை நடத்தப்பட்டது. 

அதில், அவர் மது அருந்தி இருப்பது உறுதியானது. இந்த நிலையில், இன்று ஓட்டுநர் பென்னட்டை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பனி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

govt bus driver suspend for drunk and drive in nagar kovil


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->