குஜராத் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதனால் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. பாஜகவிற்கு சவாலாக ஆம் ஆத்மி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

கடந்த மாதம் 14ஆம் தேதி இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பொழுது குஜராத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இமாச்சல பிரதேச தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் குஜராத் மாநிலத்தில் மோடி சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளதால் பாஜகவிற்கு சாதமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சியில் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 12:00 மணிக்கு குஜராத் மாநிலம் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat assembly election date announced today


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->