காய்ச்சல் இருந்தால் குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டாம் - சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பருவ மழை தொடங்கியது முதல் டெங்கு காய்ச்சல் பரவலும் ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த ஆக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “கேரளத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலைத் தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதற்காக மாநில அளவில் கட்டுப்பாட்டு மையமும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு காய்ச்சல் என்று வருவோருக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்? yennenna பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் என்னவகையான காய்ச்சல் என்பதைக் கண்டறியும் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி எலிக்காய்ச்சல் ஒருமணி நேரத்தில் கண்டறியப்படுகிறது. ஆகவே நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும். 

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் படுக்கையை சுற்றிலும் கொசுவலை போர்த்துவது கட்டாயம். இதற்காக மருத்துவமனைகளுக்கு பிரத்யேக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்தவகை காய்ச்சலையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்பவேண்டாம். டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் நல்ல தண்ணீர் தேங்காமல் இருக்க அறிவுறுத்தி வருகிறோம்” என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health minister order parents not send childrens with fever in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->