18ம் தேதிவரை கொளுத்தி எடுக்கப்போகும் வெயில்! வெப்ப அலை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
Heat wave IMD warning
இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெயிலுடன் வெப்ப அலை பெரிதும் தாக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக குஜராத்தில் நேற்று அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, டெல்லி மற்றும் வடமாநிலங்களில் வரும் 18-ந்தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மே 15-ம் தேதி முதல் வடமேற்கு இந்தியா மற்றும் குஜராத் பகுதிகளில் புதிய வெப்ப அலை தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கு ராஜஸ்தானில் 15 மற்றும் 16-ந்தேதிகளில் வெப்ப அலை பாதிப்பு சில இடங்களில் காணப்பட வாய்ப்புள்ளது.
மேலும், மே 16 முதல் 18 வரை கடுமையான வெப்ப அலை உருவாகும் சாத்தியம் அதிகமாக உள்ளதாகவும், இது குஜராத், பஞ்சாப், அரியானா, டெல்லி, கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளை பாதிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதற்கான ஆலோசனையும் வானிலை மையம் வழங்கியுள்ளது.