ஹோலி முடிந்து ஹிஜாப் விவகாரம் | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சொன்ன தகவல்!
hijap case sc 2023
ஹோலி பண்டிகை விடுமுறை முடிந்துபின், ஹிஜாப் விவகார வழக்கை விசாரணை செய்த தனி அமர்வு அமைக்கப்படும் என்று, உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தகவல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பள்ளி, கல்லூரி வகுப்புகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது.
இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும், இஸ்லாமிய மாணவிகளும் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவை உறுதி செய்து, ஹிஜாபுக்கு தடை விதித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட இரு தீர்ப்பை வழங்கினர்.
இதனையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரணை செய்ய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைக்க பரிசீலிப்பதாக அறிவித்தது.
இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், கடந்த வாரம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இதுகுறித்து நினைவூட்டப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஹோலி பண்டிகை (நாளை முதல் மார்ச் 13-ம் தேதி வரை) உச்ச நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு இவ்வழக்கை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும்’’ என்று உத்தரவிட்டார்.
ஒருபக்கம் இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்த, அந்நாட்டு அரசு மரண தண்டனை, துப்பாக்கி சூடு என்று நடத்திக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.