சமூகத்தை வடிவமைப்பதில் இந்துக்கள் முக்கிய பங்கு..சொல்கிறார் மோகன் பகவத்!
Hindus have an important role in shaping society. Says Mohan Bhagwat!
இந்து சமூகத்தை ஏன் ஒன்றிணைக்க வேண்டும்? ஏனென்றால் இந்திய சமூகத்தை வடிவமைப்பதில் இந்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் பர்பா பர்தமான் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;-"சங்பரிவார் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கான பதில், ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே ஆகும் என்றும் இந்து சமூகத்தை ஏன் ஒன்றிணைக்க வேண்டும்? ஏனென்றால் இந்திய சமூகத்தை வடிவமைப்பதில் இந்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என பேசினார்.
மேலும் இந்தியா என்பது நிலப்பரப்பு மட்டுமல்ல என்றும் இந்தியாவிற்கு இயற்கையாகவே ஒரு மனோபாவம் உள்ளது என்றும் அந்த இயற்கையான மனோபாவத்துடன் தங்களால் வாழ முடியாது என்று நினைத்தவர்கள் தங்களுக்கென தனி நாட்டை உருவாக்கிக் கொண்டனர் என கூறினார்.
மேலும் தனியாக பிரிந்து செல்ல விரும்பாதவர்கள், இந்தியாவின் மனோபாவத்தை ஏற்றுக்கொண்டனர் என்று பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்,அந்த மனோபாவம் என்பது 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ந்தேதி உருவானது அல்ல என்றும் மாறாக பண்டைய காலத்திலேயே அது உருவானது என பேசினார்.
மேலும் இந்துக்கள் உலகத்தின் பன்முகத்தன்மையை எப்போதும் ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை உலகம் உணரத் தொடங்கியுள்ளது என்றும் ஒற்றுமை என்பது பன்முகத்தன்மையில் இருந்துதான் வரும் என்பதை இந்துக்கள் உணர்ந்துள்ளனர் என்றும் அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்,இவ்வாறு தெரிவித்துள்ளார்.
English Summary
Hindus have an important role in shaping society. Says Mohan Bhagwat!