விநாயகர் சதுர்த்தி - வீட்டில் பூஜை செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்து அமைப்புகள் சார்பில் வெகு விமரிசையாக இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி பூஜை செய்து வழிபடுவது என்று இந்தப் பதிவில் காணலாம்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சுத்தமான ஆடை அணிந்துச்சென்று, விநாயகரை வாங்கிவந்து, சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் அலங்கரித்து, மேடை அமைத்து அதில் அமரவைக்க வேண்டும். பிறகு விநாயகரை அலங்கரித்து, அவருக்கு பிடித்த அவல், சுண்டல், பொரி, கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபடலாம். 

மேலும், அவருக்கு உரிய மந்திரங்களை சொல்லி, பாடல்களை பாடி மனமுருக வேண்டிக்கொள்ளலாம். விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனை வணங்குதல் நல்லது.

விநாயகர் சதுர்த்தி தின நாளில் விநாயகரை தூய மனதுடன் வழிபட்டால் வாழ்க்கையில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூஜை செய்த விநாயகரை மூன்றாம் நாள் நீரில் கரைக்கும் வரை வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to do vinayagar chathurthi poojai in house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->