சுங்க சாவடிக்குட்பட்ட நெடுஞ்சாலையை பராமரிக்க தவறிய நிறுவனத்திற்கு ரூ.30 கோடி அபராதம்..!! எங்கு தெரியுமா?..!!  - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குராலி - கிரிதாபூர் சாகிப் நெடுஞ்சாலை பகுதிகளை பராமரிக்க தவறிய., சொல்கியான் சுங்கச்சாவடிக்கு ரூ.30 கோடி அபராதம் விதித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி உத்தரவிட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

பஞ்சாபின் ரோபர் மாவட்டத்தில் உள்ள பெஹ்ராம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி சொல்கியான் சுங்கச்சாவடி ஆகும். இந்த சுங்கச்சாவடி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள நிலையில்., இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பணி ஒப்பந்தம் பெற்று., கடந்த சில வருடங்களாக குராலி - கிரிதாபூர் சாகிப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு., வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்து வருகிறது. 

மேலும்., கடந்த 2016 ஆம் வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்., சுங்கச்சாவடிக்கு உட்பட்ட சாலையில் பணிகள் நிறைவு பெறாமல் இருந்துள்ளது. இதனை கவனித்த அதிகாரிகள்., பணியை விரைந்து முடிக்க கூறி எச்சரித்து சென்றுள்ளனர். இந்த நிலையில்., தனியார் நிறுவனத்தின் சார்பில் எந்த விதமான முன்னேற்றமும் செய்யவில்லை. 

toll gate,

இதனைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் வருடத்தில்., இந்த சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் பணத்தை இரத்து செய்து., பணம் வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்படும் செயலை நிறுத்த வேண்டும் என்று., தன்னார்வலர்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனை ஏற்ற அதிகாரிகள்., சுங்கச்சாவடி நிறுவனத்திற்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப கூறி சம்மனும் அனுப்பியிருந்தனர். 

இந்த தருணத்தில்., குராலி சாலை பகுதியில் இருக்கும் மின் விளக்குகளில்., விளக்குகள் சரியாக பொறுத்தப்படாமலும்., சாலையின் இருபுற எல்லையை குறிக்கும் வங்கியில் வண்ணகோடுகள் மற்றும் பாதசாரிகள் வாகனத்தை நிறுத்தும் இடம்., இணைப்புச்சாலை குறியீடு., முறையான பராமரிப்பின்மை போன்றவற்றை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அரசின் உத்தரவின் பேரில் தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Punjab toll gate have 30 crore fine due to poor maintenance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->