எந்தெந்த துறைகளில் ஜிஎஸ்டி குறைக்கப்படும்?..... டெல்லியில் இன்று கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்! - Seithipunal
Seithipunal


மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல், ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்திற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல் உள்ளிட்டவை தொடர்பாக இன்று சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. 

தலைநகர் டெல்லியில் இன்று 54-ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கவுன்சில் கூட்டத்தில், மாநில நிதியமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி விகித சீரமைப்பு தொடா்பான அமைச்சா்கள் குழுவின் பரிந்துரைகள், காப்பீட்டு தவணைக் கட்டணத்திற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி, இணைய விளையாட்டுகள் தொடா்பான ஜிஎஸ்டி நிலவர அறிக்கை உள்ளிட்ட ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவா்களுக்கு விலக்களித்தல், குறிப்பாக ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல் குறித்து இன்று நடைபெறும் 54-ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in which sectors gst will be reduced gst council is meeting in delhi today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->