ரூ.10 கட்டணத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஓராண்டுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது.

அந்த வகையில் கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திரதின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கொச்சிமெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் 75வது வருட விடுதலை கொண்டாட்டங்களுக்கு கொச்சி மெட்ரோ தயாராகி இருக்கிறது.

இதனையொட்டி பல ரயில் நிலையங்களிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் பயண சுதந்திர சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, கொச்சி மெட்ரோ ரயிலில் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி எந்த ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து எந்த ஒரு மெட்ரோ நிலையத்திற்கும் பயணம் செய்து கொள்ளலாம்.

இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் நாட்டுப் பாடல்கள் நடனங்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Independence day celebration metro spare only 10rs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->