இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடம்.! - Seithipunal
Seithipunal


அந்நிய செலவாணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சீனா, இந்தியா ஜப்பான் மற்றும் சர்வதேச வங்கிகள், நிறுவனங்கள் கடனுதவி வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்த நிகழாண்டில் இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கிய நாடாக இந்தியா மாறியுள்ளது என்று வெரிட் ரிசர்ச் என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கைக்கு வாங்கிய 968 மில்லியன் டாலர் கடனில், இந்தியா 377 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் சுமார் ரூ.2,800 கோடி வழங்கியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி 360 மில்லியன் டாலர் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

மேலும் கடந்த 2017 முதல் 2021 வரையில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கியதில் சீனா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது இந்தியா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 40 ஆயிரம் கோடி டாலர்கள் வெளிநாட்டு கடன் இருந்து வரும் நிலையில் 2027ஆம் ஆண்டுக்குள் கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India become first in debt given to srilanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->