உக்ரைனுக்கு 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை வழங்கியது இந்தியா.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா சார்பில் 7,725 கிலோ எடையுள்ள மனிதநேய உதவி பொருட்களை உக்ரைனுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின், உக்ரைன் சுகாதாரத்துறை துணை அமைச்சர் ஒலெக்சி யரெமென்கோவிடம் வழங்கியுள்ளார்.

இந்த தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கியுள்ளன. பகைமையை மறந்து, போரை கைவிட்டு, வன்முறைக்கு முடிவு ஏற்படுத்தும் படி ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்த சந்திப்பில், இரு நாட்டு தலைவர்களும் தூதரக பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்றும், போரை முடிவுக்கு கொண்டு வரும் அனைத்து விதமான தூதராக பேச்சு வார்த்தைகளுக்கும் இந்தியா துணை நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India gives 7725 kg humanitarian aid to Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->