இலங்கைக்கு இந்தியாவின் சார்பில் 1 பில்லியன் டாலர் கடனுதவி.! - Seithipunal
Seithipunal


இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத்துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம் கொரோனா ஊரடங்கின் காரணமாக 90% பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அன்னியச் செலவாணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்குக் கூட நிதி இல்லாததால் மின் உற்பத்தி முடங்கி உள்ளது. இதன் காரணமாக பல மணி நேர மின்வெட்டு உள்ளது.

இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. தற்போதைய பொருளாதார நிதி நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டு இருந்தது. இதற்காக இலங்கை நிதியமைச்சர் பாசில் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தார். டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் ( இந்திய மதிப்புப்படி ரூ.7,580 கோடி) கடன் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உணவு மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்க எஸ்பிஐ வங்கி மூலம் இந்தியா ஒரு பில்லியன் டாலர் கடனுதவி வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India help to Srilanka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->