இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்ட 101 வயது மூதாட்டி..சிறப்பு தரிசன ஏற்பாடு!  - Seithipunal
Seithipunal


கேரளாவை சேர்ந்த 101 வயது மூதாட்டி ஒருவர் தனது பேரன், பேத்தி உள்ளிட்டோருடன் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இரண்டாவது முறையாக புறப்பட்டு சென்றார்.

சபரிமலை யாத்திரை என்பது மிகக் கடுமையானதாகும். சபரிமலையில் சுவாமி ஐயப்பன், குழந்தை வடிவமாக இருப்பதால் பெண்கள் அனைவரும் அவரை தன்னுடைய குழந்தையாக நினைப்பதுண்டு. பெண்களை தாயாக நினைத்து போற்றுவதால் கடினமான பயணத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டாம் என சொல்லப்படுகிறது. 

சபரிமலை யாத்திரை என்பது ஆண்கள் மட்டும் செல்லக் கூடியதாகும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளும், 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த 101 வயது மூதாட்டி ஒருவர் தனது பேரன், பேத்தி உள்ளிட்டோருடன் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இரண்டாவது முறையாக புறப்பட்டு சென்றார்.

வயநாடு மாவட்டம் முன்னானிக்குழி பகுதியை சேர்ந்தவர்தான் வயது 101 மூதாட்டி பாருக்குட்டி 
கடந்த ஆண்டு பாருக்குட்டி தனது 100 வயதில் முதல்முறை சபரிமலை சென்று தரிசனம் செய்தார். அப்போது மூதாட்டி கூட்டத்தில் சிக்கி விடாமல் தரிசனம் செய்ய வைத்தனர்,   வயது முதிர்வை கருத்தில் கொண்டு போலீசார், தேவசம்போர்டு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை செய்தனர் . இதனால் இந்தமுறை நான் சபரிமலை செல்ல விரும்புகிறேன் என்று அண்மையில் பாருக்குட்டி தெரிவித்தார். இதையடுத்து அவர் சபரிமலை ஏறி கூட்டத்தில் நிற்காமல் தரிசனம் செய்ய போதுமான வசதிகளை செய்து கொடுக்க பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் வயநாடு மாவட்டம் முன்னானிக்குழி பகுதில் உள்ள கோனேரி நாராயண குரு சண்முகா கோவிலில் நெய், தேங்காய் மூலம் இருமுடி கட்டினார் மூதாட்டி பாருக்குட்டி . தனது பேரன், பேத்தி உள்ளிட்டோருடன் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இரண்டாவது முறையாக புறப்பட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

101year old woman leaves for Sabarimala temple Special darshan arrangements


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->