லஷ்கர் தீவிரவாதிகள் 5 பேரை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!!
Indian Army killed 5 Lashkar e Taiba terrorists in Kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததோடு ஜம்மு மற்றும் காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தீவிரவாத செயல்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 46 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அதில் 37 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், 9 பேர் மட்டுமே ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜம்முவின் குப்வாரா மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே மச்சில் என்ற பகுதியில் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாநில காவல் துறையும், இந்திய ராணுவமும் இணைந்து நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இடத்தை ராணுவத்தினர் முழுமையாக சோதனை செய்தனர்.
English Summary
Indian Army killed 5 Lashkar e Taiba terrorists in Kashmir