இந்தியாவின் பெயரில்லாத ரயில் நிலையம்: ஒரு சுவாரஸ்யமான உண்மை! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெயர் இல்லாத ஒரு ரயில் நிலையம் ஒன்று உள்ளது. மேற்கு வங்காள மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் 2008 ஆம் ஆண்டு முதல் பெயரிடப்படாமல் இயங்கி வருகிறது.

ஏன் பெயரிடப்படவில்லை?

இந்த ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் ரெய்னா மற்றும் ராய்நகர் என இரண்டு கிராமங்கள் உள்ளன. இவ்விரண்டு கிராம மக்களும் தங்களது கிராமத்தின் பெயரை இந்த ரயில் நிலையத்திற்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் இரு கிராமங்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நிலை நீடித்தது. இதன் காரணமாக இந்த ரயில் நிலையத்திற்கு எந்த பெயரும் வைக்கப்படாமல் போய்விட்டது.

தற்போதைய நிலை:

இந்த நிலையத்தில் தினமும் ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் இறங்கும் புதிய பயணிகள் பெயர் இல்லாததால் குழப்பமடைகின்றனர். இங்கு வரும் பயணிகள் தங்களது இடத்தை கண்டுபிடிக்க உள்ளூர் மக்களிடம் கேட்க வேண்டியுள்ளது.

இந்த ரயில் நிலையத்திற்கு பெயரிடும் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே இந்த ரயில் நிலையத்திற்கு பெயர் வைக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Railway Station no Nameplate 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->