கத்தார் இளவரசரின் சிறப்பு அதிகாரம்! முக்கிய புள்ளியை களமிறக்கிய மத்திய அரசு! யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய தூதர் தீபக் மிட்டல் மூலம் கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை மீட்க இந்தியா முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். கடந்த 1998 பேட்ச் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்த தீபக் மிட்டல் கத்தாரில் 2 ஆண்டுகள் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் புலனாய்வு அமைப்பால் 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டபோது தீபக் மிட்டல் தோஹாவில் இருந்தார். தற்போது தீபக் மிட்டல் பிரதமர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தீபக் மிட்டல் முக்கியமான பணிகளைக் கையாள்வதில் வல்லவராக செயல்படக்கூடியவர்.

தலிபான் உடன் இந்தியா முதல் முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது தீபக் மிட்டல் தலைமை தாங்கினார். மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவை பாதுகாத்த குழுவில் முக்கிய பங்காற்றினர். கத்தார் விவகாரத்தில் தீபக் மிட்டலுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் வழிகாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கத்தார் அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இவர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், கத்தாரின் ரகசிய பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியாகி இருந்தது.

தீபக் மிட்டல் கத்தார் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 8 இந்தியர்களை விடுவிக்கக் கோருவார். ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான சட்ட உதவியை வழங்கவும் மற்றும் மன்னிப்புக்காக கத்தார் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை அணுகவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கத்தார் நாட்டின் இளவரசருக்கு மன்னிப்பு அல்லது தண்டனையை மாற்றம் அதிகாரம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று கத்தாரின் தேசிய தினத்தன்று கைதிகளை விடுவிக்க அவர் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருக்கமான பொருளாதார உறவுகளின் அடிப்படையிலும், கத்தாரில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் தேவையில் பாதியை இந்தியா இறக்குமதி செய்வதன் அடிப்படையில் கத்தார் இளவரசருடன் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indiangovt appointed top ifs officer to save 8 navy men from Qatar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->