பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு.!
Indonesian government lifts ban on palm oil exports
பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை வரும் திங்கள்கிழமை முதல் விலக்கி கொள்ளப்படுவதாக இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.
இதன்மூலம் மூன்று வார காலமாக இருந்த பாமாயில் ஏற்றுமதிக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. பாமாயில் ஏற்றுமதியை ஏரி எதிர்த்து செவ்வாய்க்கிழமை ஜகார்த்தாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உள்நாட்டில் சமையல் எண்ணெயில் வினியோகத்தை சீராக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெயின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது.
English Summary
Indonesian government lifts ban on palm oil exports