நாட்டையே உலுக்கிய சம்பவம்.. ரயில் விபத்துக்கு காரணம் என்ன.? வெளியான பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேற்று மாலை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்தற்போது வரை 288 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான மீட்பு பணிகள் தற்பொழுது நிறைவு பெற்ற நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரயில்வே துறை அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் படி தவறான சிக்னல் கொடுத்தது ரயில் விபத்துக்கு காரணம் என்பது 4பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மெயின் லைனில் செல்ல சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பச்சையில் சிக்னல் ரத்தானதால் லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மெயின் லைனில் மீது விழுந்ததால் மெயின் லைனில் வந்த யவந்த்பூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் அந்தப் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது" என்ற அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Initial reports signal failure was cause of Coromandel train accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->