துக்க செய்தியை கேட்டு தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி !!
IPS officer committed suicide after hearing sad news
அஸ்ஸாம் மாநிலத்தின் IPS அதிகாரி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது மனைவி இறந்த செய்தியைப் பெற்ற சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொண்டார். அஸ்ஸாம் மாநில உள்துறை மற்றும் அரசியல் துறையின் செயலாளரான ஷிலாதித்யா சேட்டியா, கவுகாத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மனைவி புற்றுநோயின் நான்காவது கட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக அவர் உயிரிழந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ஷிலாதித்யா சேட்டியா, தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக விடுப்பில் இருந்தார். முன்னதாக, அவர் பல மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகவும், துணைக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார்.
ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில், ஸ்ரீ ஷிலாதித்யா சேத்தியா IPS 2009 RR, உள்துறை மற்றும் அசாமின் அரசியல் அரசாங்கத்தின் செயலாளர், தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இன்று மாலை, நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடிய அவரது மனைவியின் மரணம் குறித்து கலந்துகொண்ட மருத்துவர் அறிவித்த சில நிமிடங்களில், ஒட்டுமொத்த அஸ்ஸாம் காவல்துறை குடும்பமும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது என அஸ்ஸாம் காவல்துறை செட்டியாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தது என மாநில காவல்துறை தலைமை இயக்குனர் ஜிபி சிங் தனது X பக்கத்தில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
ஷிலாதித்யா சேத்தியாவின் தற்கொலை பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர் பார்பேட்டா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்ததால் அவரை நான் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அவர் திறமையான நிர்வாகி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என முன்னாள் காங்கிரஸ் எம்பி அப்துல் கலீக் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary
IPS officer committed suicide after hearing sad news