இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 'பணி நீட்டிப்பு': மத்திய அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான், விண்வெளி ஆய்வு மைய இயக்குனரான விஞ்ஞானி ராஜராஜன், கேரள திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன், குஜராத் அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், கர்நாடகா பெங்களூருவில் உள்ள யூ.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குனர் விஞ்ஞானி சங்கரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். 

இதுபோல் பெங்களூரு மனித விண்வெளி விமான மைய இயக்குனர் விஞ்ஞானி மோகன், திருவனந்தபுரம் இஸ்ரோ இன்டெர்ஷியல் சிஸ்டம் யூனிட் இயக்குனராக விஞ்ஞானி பத்மகுமார், சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். 

இவர்களுடைய பணிக்காலம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஓய்வு பெற உள்ள 8 விஞ்ஞானிகள் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு செய்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isro scientists work extension Central government order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->