அதானி லஞ்சம் அளித்தது உறுதி?....செல்போனில் அதிர்ச்சி தகவல்!
It is confirmed that adani paid a bribe shocking information on the cell phone
தொழிலதிபர் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது, தொழில் துறையில் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் 2023-ம் ஆண்டு, எப்.பி.ஐ சிறப்பு முகவர்கள் சாகர் அதானியை சந்தித்த போது, அவரிடம் இருந்த மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், தொழிலதிபர் அதானியின் உறவினர் சாகர் அதானியின் செல்போனில் அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்ச பணம் அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, தலைநகர் டெல்லியில் 2022-ம் ஆண்டு கவுதம் அதானி, வினீத் எஸ் ஜெயின், ரஞ்சித் குப்தா மற்றும் பலர் சந்தித்து லஞ்சம் குறித்து விவாதித்ததும், அப்போது செல்போனில் நிறுவனம் வாரியாக செலுத்த வேண்டிய தொகையைக் காட்டும் ஆவணத்தை படம் எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், 650 மெகாவாட் ஒப்பந்தங்களுக்கு ரூ.55 கோடியும், 2.3 ஜிகாவாட் பிபிஏ-க்கு ரூ.583 கோடியும். மெகாவாட் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக உள்ளன. மேலும், ஒப்பந்தங்கள் தொடர்பாக குப்தா மற்றும் சாகர் அதானி இடையே நவம்பர் 24, 2020 தேதியிட்ட மின்னணு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
It is confirmed that adani paid a bribe shocking information on the cell phone