ராஜினாமா செய்த முதல்வர்! ஆட்சி அமைக்க உரிமை கோரிய ஹேமந்த் சோரன்! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், முதல்வராக இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம்  31-ந்தேதி ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. சிறைக்கு சென்றதால் அவர் தந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜார்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார்.

பலமுறை இவரின் ஜாமின் மனுக்க நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி ஜாமினில் விடுவித்தது. 

இதனையடுத்து தலைநகர் ராஞ்சியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மேற்கொண்ட ஆலோசனையில், மீண்டும் ஹேமந்த் சோரனை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கினார்.

மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரி உள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஹேமந்த் சோரன் தெரிவிக்கையில், முதல்வர் சம்பயி சோரன் உங்களிடம் எல்லாவற்றையும் கூறியிருப்பார். இது தொடர்பாக விரிவாக பின்னர் பேசலாம். நாங்கள் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி செயல்படுகிறோம் எனக் குறிப்பிட்டுச் சென்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand Chief Minister Sambai Soren resignation New CM Hemant soren


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->