சட்டசபையில் இருந்து ஆர்.என். ரவி வெளியேறியது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டு உள்ளது என்றும் இதனால்தான் கவர்னர் வெளியேறினார் என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்து உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தலைகீழாக மீண்டும் மாறிஉள்ளது. சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர்  ஆர்.என். ரவி புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் அறிவித்தபடி , தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர்.இதையடுத்து  கூட்டத்தொடரை முன்னிட்டு, சபாநாயகர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில், ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக சட்டசபை கூடியதும்  சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.அதனை தொடர்ந்து  கவர்னர் ஆர்.என் ரவி உரையாற்றுவார் என சபாநாயகர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் காத்திருந்த நிலையில்  சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அவையில் இருந்து கவர்னர் வெளியேறியது பற்றி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவுடன் தேசிய கீதம் பாட வேண்டும் என முதல்-அமைச்சர், சபாநாயகரிடம் கவர்னர் வலியுறுத்தினார் என்றும்  ஆனால், கவர்னர் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு உள்ளது என்றும்.இதனால், தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டு உள்ளது என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது. 

மேலும் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது என்பது அரசமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் கடமையாகும் என்றும்  அதனை பாட மறுத்தது வருத்தத்திற்குரிய விசயம் என குறிப்பிட்டுள்ள கவர்னர் மாளிகைஇதனால், மிகுந்த வருத்தத்துடன் அவையில் இருந்து கவர்னர் வெளியேறினார் என்றும்  அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என கவர்னர் வெளியேறினார் என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

R.N. from the Assembly Why did Ravi leave Governor's Palace Explained


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->