" மீட்பு பணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் " - 3ம் வகுப்பு மாணவன் ராணுவத்திற்கு கடிதம்!
Join me in the rescue mission 3rd class student letter to Army
வயநாடு மீட்பு பணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என ராணுவத்திற்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் கடிதம் எழுதி உள்ள சம்பவம் பெரும் நேகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டகை, சூரல்மலை,மேம்பாடு ஆகிய பகுதிகளின் நிலச்சரிவு ஏற்பட்டு 380க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால் 400க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக நிலச்சரிவில் சிக்கி உள்ளது. நிலசரில் வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மீட்பு குழு மற்றும் பல்வேறு அமைப்புகளின் சேர்ந்தவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கும் பணியில் ஈடுபடுட்டுகொண்டுள்ளவர்களுக்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் உணவு,பிஸ்கட் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுவன் ராயன் எழுதிய கடிதத்திற்கு ராணுவம் பதில் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தை சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். சிறுவன் ராயனின் இதயபூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாக தொட்டு விட்டன.
இக்கட்டான காலத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நீங்கள் அனுப்பிய கடிதம் இந்த பணியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ஜாம்பவான்கள் ராணுவத்தில் இணைவது பெருமையே.
நீங்கள் ராணுவ சீருடை அணிந்து எங்களின் பக்கத்தில் நிற்கும் நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.சிறுவன் ராயன் ராணுவத்திற்கு எழுத கடிதம் சமூக வலைதளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Join me in the rescue mission 3rd class student letter to Army