புதுச்சேரியில் இருந்து தமிழகத்தில் இணையப் போகும் பகுதி.? பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி ஆட்சியாளர்களால் காரைக்கால் மாவட்டத்தை புறக்கணிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வரும் நிலையில், காரைக்காலை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என கோரி ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த இயக்கத்தின் சார்பில் காரைக்கால் முழுவதும் முக்கிய சாலைகள், மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் அசிங்கம்! அவமானம்!! வெட்கம்!! புதுவை அரசே ...? நாங்கள்... என்ன அனாதைகளா...!

காரைக்கால் மக்களுக்கு காலம் காலமாக எவ்வித அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் வழங்காத புதுவை அரசை நாங்கள் புறக்கணிக்கின்றோம். காரைக்காலை தமிழ்நாடோடு இணைப்போம்... பொது வாக்குகெடுப்பு நடத்த புதுவை அரசே தயாரா... என காரைக்கால் தமிழ்நாடுடோடு இணைப்போம் இயக்கம் சுவரொட்டி ஒட்டியுள்ளது.

இந்த சுவரொட்டி விவகாரம் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் எதிரொலித்துள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் மூலம் பயன் பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக  கலந்துரையாடினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், காரைக்கால் சுவரொட்டி குறிப்பிட்டு, எந்த காலத்திலும் புதுச்சேரியில் எந்த பகுதியும் புறக்கணிக்கப்படாது என உறுதி அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karaikal and tamilnadu join poster


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->