ஒரு யூனிட்டுக்கு 36 பைசா மின் கட்டணம் உயர்வு! வெறும் 1 ஆம் தேதி முதல் அமல் - பாஜக கடும் கண்டனம்!
Karnataka Govt EB Bill hike per unit 36 paisa
கர்நாடக மின்சார ஒழுங்காற்று ஆணையம், அம்மாநிலத்தில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திருத்தம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
மின் வழங்கல் நிறுவன ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பங்குத்தொகை செலவினங்களை நுகர்வோரிடமிருந்து மீட்டெடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட மின்சார ஒழுங்காற்று ஆணையம், அரசால் வழங்கப்பட்ட தொகையை மீட்க அனுமதி வழங்கியுள்ளது.
இதன் படி, 2026-27 மற்றும் 2027-28 நிதியாண்டுகளில், ஓய்வூதியக் கட்டணமாக முறையே 35 பைசா, 34 பைசா என நிர்ணயிக்கப்படும். இதன் விளைவாக, மின் கட்டணத்தில் சராசரியாக 26 பைசா உயர்வு ஏற்படும். இந்த மாற்றம் 2025 முதல் 2028 வரை நீடிக்கும்.
இந்த கட்டண உயர்வை எதிர்த்து உள்ள பாஜக, "மக்களுக்கெதிராக செயல்படும் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததனால் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஒரு யூனிட்டுக்கு 36 பைசா அதிகரிப்பு மக்களின் பொருளாதார சுமையை அதிகரிக்கும். ஒரு பக்கம் இலவசத்திட்டங்களை அறிவிக்க, மறுபக்கம் கட்டண உயர்வு மூலம் மக்கள் பணத்தை திரட்டுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளது.
English Summary
Karnataka Govt EB Bill hike per unit 36 paisa