தொடர்ந்து பரவும் குரங்கு அம்மை: இதுவரை 21 பேர் பாதிப்பு!
Karnataka monkey measles affected 21people
மத்திய மற்றும் மேற்கு அமெரிக்க நாடுகளில் கடந்த 1970களில் குரங்கு அம்மை நோய் பரவி முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டது.
இந்த குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதால் பரவுகிறது. இந்த நோய் பரவும் தன்மை உள்ளதால் 4 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்தும். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, உடலின் தடுப்புகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
இந்த நோய் உமிழ்நீர், சளி மூலம் பரவக்கூடியது. இந்நிலையில் கர்நாடகா, உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் 21 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 13 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரத் துறை சார்பில் நோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என மாவட்ட சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
English Summary
Karnataka monkey measles affected 21people