அயோத்தியில் கேஜரிவால் மற்றும் பகவந்த் மான் சாமி தரிசனம்: வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவத் மானும் இன்று குடும்பத்தினருடன் அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். 

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலின் சிலை பிரதிஷ்ட விழாவில் கலந்து கொள்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்தார்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றுள்ள டெல்லி முதல்வரும், பஞ்சாப் முதல்வரும் தங்களது குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். 

இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், புகைப்படங்களை வெளியிட்டு நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kejriwal and Bhagwant sami Darshan in Ayodhya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->