கேரளா | 3 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் அப்டேட்! முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal


கேரளத்தில் 3 மாநிலங்களவை எம்.பிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அந்த இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் மாநிலங்களவை எம்.பிகளாக உள்ள ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எளமரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம், ஆளும் இடது சாரி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோஸ் கே. மாணி ஆகியோரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 

இந்த மூன்று எம்.பி இடங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

வேட்பு மனு தாக்கல் ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதி வரை தாக்கல் செய்து கொள்ளலாம். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 14ஆம் தேதி நடைபெறும். 

மனுக்களை திரும்ப பெற ஜூன் 18 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala 3 Rajya Sabha seats Election update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->