இனி நோயாளி பக்கத்திலேயே போக வேண்டாம் - வந்தாச்சு புளூடூத் ஸ்டெதஸ்கோப்..!
kerala doctor make bluetooth stethascope
மருத்துவர்களுக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான உபகரணம் 'ஸ்டெதஸ்கோப்'. இதன் மூலம் நோயாளிகளின் இதயத்துடிப்பு, நுரையீரல், இரைப்பை, குடல், கருப்பை ஆகியவற்றில் ஏற்படும் ஒலிகளை கேட்க முடியும்.
அந்த ஒலிகளை வைத்து தான் நோயாளியின் உடல் நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை மருத்துவர் கண்டு பிடித்து சிகிச்சையை தொடங்க முடியும். அதனால், மருத்துவர்கள் எல்லா நேரத்திலும் ஸ்டெதஸ்கோப்பை தங்களுடன் வைத்திருப்பர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர், புளூடூத் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்கியிருக்கிறார்.
அதாவது கேரள கால்நடை பல்கலைக்கழகத்தில் மன்னுத்தி வளாகத்தில் உள்ள கால்நடை உற்பத்தி மேலாண்மை கல்லூரியின் டாக்டர் ஜான் ஆபிரகாம் புளூடூத் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்கி உள்ளார். இந்த ஸ்டெதஸ்கோப் இரண்டு தனித்தனி பாகங்களைக் கொண்டுள்ளது. ஒன்று நோயாளியின் உடலிலும், மற்றொன்று மருத்துவரின் காதுகளிலும் வைக்கப்படும். நோயாளியின் உடலில் இருந்து உருவாகும் சத்தம், மருத்துவர் காதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி மூலம் கேட்கிறது.
இதனால் நோயாளி மற்றும் மருத்துவருக்கு இடையேயான நேரடி உடல் தொடர்பை குறைக்கிறது. நோயாளியின் இதய துடிப்பு, நுரையீரல் ஒலிகள் மற்றும் பிற சத்தங்களை தூரத்தில் இருந்தே மருத்துவர் கேட்க முடியும். இதனை பாரம்பரிய ஸ்டெதஸ்கோப்புடன் ஒப்பிடும் போது, விலை குறைவாக உள்ளது. இந்த 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' உருவாக்கியுள்ள டாக்டர் ஜான் ஆபிரகாம், அதற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
kerala doctor make bluetooth stethascope