13 வயது சிறுமி, சொந்த சகோதரனால் பலாத்காரம் : பள்ளியில் பாலியல் கல்வி அவசியம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர், சொந்த சகோதரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில், அம்மாநில உயர்நீதிமன்றம், "பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் 13 வயதில் சிறுமியை அவரின் சகோதரன் ஆன சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாகவே, அவரின் 30 வார கருவை கலைக்க அனுமதி கோரி, சிறுமியின் தாய் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும், அந்த குழந்தை (கரு) உயிருடன் இருந்தால், அதற்குரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், குழந்தையை சம்பந்தப்பட்ட மனுதாரர் வளர்க்க சம்மதிக்கவில்லை என்றால், அரசேஅதனை வளர்ப்பதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இது மட்டுமல்லாமல் மாநில அரசுக்கு மேலும் சில பரிந்துரைகளை செய்தது. அதில், கேரள மாநிலத்தில் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இது குறித்த வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக குழந்தைகள் தேவையில்லாத விஷயன்களை பார்ப்பது தான்.

இது குறித்த விழிப்புணர்வை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக பள்ளி பருவத்திலேயே குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தற்போதைய சூழ்நிலையில் இதுதான் மிக அவசியமான ஒன்று" என்று கேரளா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி, அரசுக்கு இந்த பரிந்துரையை அளிப்பதாக அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala hc order for child education


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->