கேரளா : மாணவர்களுக்கு 33 லட்சம் அபராதம் விதித்த என். ஐ. டி. - கண்டனம் தெரிவித்த மாணவர் கவுன்சில்..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  ( என். ஐ. டி. ). இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரி வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மற்றும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கல்லூரியின் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் கடந்த மார்ச் 20 -ம் தேதி கல்லூரியின் நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தி உள்ளனர். மேலும் அந்த சமயத்தில் கல்லூரிக்கு வந்த பணியாளர்களை பணி செய்ய விடாமல் நுழைவு வாயிலுக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். 

இதையடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 5 பேர் மீது கல்லூரியின் அலுவலகப் பணிகளை பாதித்ததாக கூறி, விளக்கம் அளிக்க 7 நாட்கள் அவகாசம் தந்து, கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மேலும் அந்த நோட்டீஸில் உங்களின் நடத்தையால் கல்லூரிக்கு ஏற்பட்டுள்ள இழப்பை உங்களிடம் இருந்தே வசூலிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து அந்த 5 மாணவர்களுக்கும் ரூ. 33 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து என். ஐ. டி. மீடியா செல் தலைவர் சுனிதா கூறியதாவது, "இந்த மாணவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் படவில்லை. ஆனால் மாணவர் விவகார கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala NIT Fixing Penalties To Their Students As a Part Of Disciplinary Action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->