பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்ததற்கான ஆதாரங்கள் இல்லை! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
Kolkatta Doctor Hacked to death case shocking info
கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, முதுகலை மருத்துவ மாணவி மருத்துவமனைக்குள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்கம் முதலே விசாரணை முறையில் பல சந்தேகங்கள் மற்றும் முரண்பாடுகள் எழுந்தன.
பெற்றோர்களுக்கு சரியான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டு இருப்பது, மாணவின் பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து புதிய விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என பெற்றோர்கள், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு ஜனவரி 2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
English Summary
Kolkatta Doctor Hacked to death case shocking info