திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துடன் சாமி தரிசனம்!  - Seithipunal
Seithipunal


ஆந்திரா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் செய்தார். 

கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்த இவர், பணி நியமனம் தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். 

பின்னர் லாலு பிரசாத், அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

இந்நிலையில் லாலு பிரசாத் குடும்பத்தினருடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் லாலு பிரசாத் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, திருமண நாளான இன்று எனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து வெங்கடேச பெருமாளின் ஆற்றலையும் ஆசீர்வாதத்தையும் பெற்றேன். 

மாநில மக்களின் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நன்மைக்காக நாங்கள் பிரார்த்தனை செய்தோம் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lalu Prasad Yadav Sami darshan Tirupathi Eyumalayan Temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->