மைசூர் ஐ.டி வளாகத்திற்குள் சிறுத்தை புலி - தீவிர தேடுதலில் வனத்துறையினர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் மைசூருவில் இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வளாகம் அருகே ரிசர்வ் வனப்பகுதி உள்ளது. இதனால் அங்கிருந்து சில விலங்குகள் அவ்வப்போது இன்போசிஸ் நிறுவன வளாகத்திற்குள் புகுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிறுத்தைப் புலி ஒன்று வளாகத்திற்குள் புகுந்தது. உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

இருப்பினும் சிறுத்தைப் புலியை உடனடியாக கண்டுபிடிக்க முடியாததால் பாதுகாப்பு நடவடிக்கையாக பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு இன்போசிஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் 50 பேர் கொண்ட வனத்துறையினர் அடங்கிய குழு ஒன்று இன்போசிஸ் வளாகத்திற்குள் முகாமிட்டு சிறுத்தைப் புலியை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுத்தைப் புலியை பிடிக்க கூண்டுகள் மற்றும் வலைகள் அங்கு தயார் நிலையில் உள்ளன. மேலும், சிறுத்தையை கண்டுபிடிக்க டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மூத்த வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

leopard found in mysore it ground


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->