5 நாட்களுக்கு மது விற்பனை இல்லை - அரசு அறிவிப்பை தொடர்ந்து பாரில் குவியும் 'குடி'மகன்கள்!
liquor sales banned for 5 days in karnataka due to parliament election result
வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
இதையடுத்து கர்நாடகாவில் சட்ட மேலவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருப்பதாலும், சட்ட மேலவைத் தேர்தல் நடைபெற உள்ளதாலும், 5 நாட்களுக்கு கர்நாடகாவில் மது விற்பனை செய்யக்கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கவே மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாக கர்நாடக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள 'குடி'மகன்கள் இப்போதே மதுக்கடைகளில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
கைகளில் பெரிய பெரிய கட்டைப்பைகளையும், பெரிய தோள் பைகளையும் கொண்டு சென்று மதுபானக் கடைகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் சட்ட மேலவைத் தேர்தல் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது. எனவே தான் ஜூன் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மது விற்பனையை அரசு தடை செய்துள்ளதாகத் தெரிகிறது.
English Summary
liquor sales banned for 5 days in karnataka due to parliament election result