இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க - ராகுல்காந்தி கடிதம்! - Seithipunal
Seithipunal



கடந்த வாரம் தமிழக மீனவர்கள் 37 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

மேலும், மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து உள்ளது. கைது செய்யப்பட்ட நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு & காஷ்மீரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தேர்தல் பிரச்சாரம்:

ஜம்மு & காஷ்மீடீ சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி வதேரா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் பிரச்சார உரையில், "ஜம்மு & காஷ்மீருக்கு அழகு, வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இயற்கை கொடுத்துள்ளது.

ஒருவரிடம் எல்லாம் இருக்கும் போது, ​​யாருடைய எண்ணம் சரியில்லையோ, அவர்கள் அதைப் பறிக்க முயல்வது தான் உலக இயல்பு. ஜம்மு & காஷ்மீரை பாஜக தலைவர்கள் தங்கள் அரசியலுக்காக பகடைக்காய் ஆக்கிவிட்டனர்.

ஜம்மு & காஷ்மீருக்கான கொள்கைகள் உருவாக்கப்படவில்லை,  உருவாக்கப்பட்ட கொள்கைகள் எல்லாம் அரசியல் செய்வதற்காக" என்று பிரியங்கா காந்தி வதேரா பிரச்சாரத்தில் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LOP RahulGandhi letter to union minister JaiShankar TNFishermen


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->