மகா சிவராத்திரி : 23,436 ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிற்பத்தை செய்த.. மணல் சிற்ப கலைஞர்.! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை சதுர்த்தி திதி அன்று சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரையில் சிவபெருமானின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

மொத்தம் 23,436 ருத்ராட்சங்களை கொண்டு 6 மணி நேரத்தில் இந்த சிற்பத்தை அவர் வடிவமைத்துள்ளார். இதற்கு சுமார் 12 டன் மணலையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

மேலும், முதல் முறையாக மணல் சிற்ப வடிவமைப்பிற்கு ருத்ராட்சங்களை பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சிலையை அவர் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் வடிவமைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Made Shiva sculpture with 23,436 Rudrats Sand sculptor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->