மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!
Madras high court judge appointed as chief justice of manipur
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில்,
மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில், மணிப்பூரில் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.. இதனை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அண்மையில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது.
இதனை ஏற்றுக்கொண்டு டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதனை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மணிப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது. மேலும் காலியிடங்கள் 9 ஆக அதிகரித்துள்ளது.
English Summary
Madras high court judge appointed as chief justice of manipur