30 ஆண்டுகள் தொடர்ந்த வழக்கு; மஹாராஷ்டிரா அமைச்சருக்கு 02 ஆண்டுகள் சிறை; நீதிமன்றம் தீர்ப்பு ..!
Maharashtra minister gets 2 years in prison
மஹாராஷ்டிரா அமைச்சர் ஒருவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் 02 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் பா.ஜ.க, கூட்டணியில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்ராவ் கோகாடே விவசாயத்துறை அமைச்சராக உள்ளார்.
இவர் கடந்த 1995-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரின் விருப்புரிமையின் கீழ் குறைந்த வருவாய் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சலுகையை பெற போலி ஆணங்களை சமர்பித்துள்ளார். அதன் மூலம் நாசிக் மாவட்டம் யோலகர்மாலா என்ற இடத்தில் இரு பிளாட்டுகள் வாங்கியுள்ளார்.

இது குறித்து சர்கார்வாடா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 30 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் அமைச்சர் மாணிக்ராவ் கோகாடே, சகோதரர் சுனில் கோகாடே ஆகியோர் பிளாட் வாங்கியதில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவருக்கும் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அமைச்சர் மாணிக்ராவ் கோகாடே கூறுகையில், செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளதாகவும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த தனஞ்ஜெய் முண்டே என்ற மற்றொரு அமைச்சர் கடந்தாண்டு டிசம்பரில் குற்றவழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Maharashtra minister gets 2 years in prison