திடீர் திருப்புமுனை! நீட் முறைகேடு விவகாரம்! சிக்கிய முக்கிய குற்றாவளி!
Main culprit arrested in NEET scam case
நீட் முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெளியான நீட் தேர்வு முடிவுகளில் 67 மாணவர்கள் முழுமதிப்பெண்ணான 720க்கு 720 எடுத்திருந்தனர். அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 7 பேர் முழுமதிப்பின் பெற்ற சம்பவம் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் சோதனை செய்து, பல்வேறு முக்கிய குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை சிபிஐ 6 வழக்குகளை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பீகாரை பொருத்தவரை முக்கிய வினாத்தாள் கசிவை முன்வைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் முறைகேட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராகி என்ற ராகேஷ் ரஞ்சன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகேஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாட்னா மற்றும் புறநகரங்களில் மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பீகார் மற்றும் ஜார்கண்டில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வாரத் தொடக்கத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியது. நீட் முறை கேட்டு விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சிபிஐ இடம் சிக்கி இருப்பது இந்த விவகாரத்தில் பெரிய திருப்புமுனை கருதப்படுகிறது.
English Summary
Main culprit arrested in NEET scam case